1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

அரசு பள்ளி கணினி பயிற்சியாளர்: 12ல் தேர்வு

அரசு பள்ளி கணினி பயிற்சியாளர் 12ல் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் சிறப்புத் தேர்வு
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்சியாளர்களை நியமிப்பது தொடர்பாக வரும் 12ம் ஆம் தேதி சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களில் கூறப்படுவதாவது:

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரிந்து வரும் கணினி பயிற்சியாளர்களை சிறப்பு தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் அவர்களை முறையாக நியமனம் செய்ய முடிவு செய்ய அரசு முடிவு செய்திருந்தது.

அதன்படி சிறப்புத் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆயத்தமான நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கணினி பயிற்சியாளர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, வரும் 12 ஆம் தேதி இத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஏற்கனவே சிறப்புத் தேர்வுவுக்கு விண்ணப்பித்திருந்த கணினி பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்கலாம்.
About Writer
Webdunia