தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற ஜூலை 18-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் வி.கு. சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் கல்வி ஆண்டில் பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியுஎம்எஸ் (யுனானி), பிஎன்ஒய்எஸ் (இயற்கை - யோகா மருத்துவம்), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளில் அரசு கல்லூரிகளில்...