வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா...?

ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால்,  காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். 
எந்த பொருள்களை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, நம் உடல்நலனையும்  பாழாக்கிக் கொள்கிறோம்.
 
ஃப்ரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயுவானது அதிகப்படியான குளிரில் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுத்துவிடும் பழமும் அழுகிவிடும். காற்றோட்டமுள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.
 
அதிக குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கப் கூடியது காற்றுப்புகக் கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளி சில நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளியின் சுவை குறையும்.
மூலிகைகள், கீரைகள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின்  சத்துக்கள் குறையும். நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும் உலர்ந்து  போகாமல் இருக்கும்.
 
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகிய நாற்றம் ஏற்படும். அதிலுள்ள ஃபோலிக் ஆசிட் குவர்சிட்டின் சத்துகளும் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும் வெங்காயம் உலர்ந்தாலும் அதன் சுவையும் சத்துக்களும் மாறாமல் இருக்கும்.
 
உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் காற்றோட்டமுள்ள இடங்களில் உருளைக்கிழங்குகளை வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதனுடைய சுவை குறைந்துவிடும்.
 
தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதும் ஒருவேளை நறுக்கினால், இரண்டு நாட்கள் மட்டுமே ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அப்பழங்கள் நீர்த்தன்மையை இழந்துவிடும்.
 
எந்தப் பழத்தையும் நறுக்கிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் வாயு பழங்களின் மீது படரும். இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். பழங்களில் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். தேவையானபோது பழத்தை நறுக்கி உண்பதே நல்லது.