வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையான முறையில் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர குறிப்புகள் !!

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம். 

கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. கறிவேப்பிலையை வெயிலில் காயவைத்து, சூடான எண்ணெய்யில் சேர்த்து, மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.
 
சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊறவைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும். நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.
 
அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊறவைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.
 
எலுமிச்சை சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊறவைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.
 
நல்லெண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும். கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். மேலும் கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.