வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களது முகத்தை பார்க்கும்போது, முகவும் டல்லாக தெரியும். இனி அந்த கவலை வேண்டாம். முகம் பளபளப்ப வைத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்ப்போம்.
1. முட்டை மற்றும் எலுமிச்சை சாறு, இவற்றை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும். பின்பு அவற்றில் எலுமிச்சை சாறை கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் ஃபேஸ் மாஸ்க் தயார். 
 
இந்த மாஸ்கை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். இவ்வாறு செய்வதினால் ஆயில் ஃபேஸ் மறைந்து, முகம் ஈரப்பதமாக காட்சியளிக்கும்.
 
2. முகம் பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த ஃபேஸ் மாஸ்க்கை தயார்த்து பயன்பெறலாம். அதற்கு தேவையான பொருட்கள் முட்டை, தேன், தயிர், வெள்ளரிக்காய் சாறு.
 
செய்முறை: முதலில் 1/2 வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் அடித்து கொண்டு,  அதில் சிறிது மிதமான சூட்டில் சூடு செய்த 1 டீஸ்பூன் தேனை கலக்கவும். 1/2 கப் தயிர் மற்றும் வெள்ளரி சாற்றை அதனுடன் கலந்து  கொள்ளவும் அவ்வளவுதான் ஃபேஸ் மாஸ்க் தயார்.
 
இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் எரிச்சல் கொண்ட முகத்தை  மென்மையாக மாற்றும்.