வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (16:33 IST)

சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்ட பச்சை கற்பூரம் !!

பச்சை கற்பூரம் மற்றும் தீப ஆராதனைகளுக்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் இரண்டும் வெவ்வேறானது. கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தங்களில் பச்சை கற்பூரம் சேர்த்தே தீர்த்தம் செய்கிறார்கள்.


இந்த பச்சை கற்பூரத்தை உணவில் சேர்க்கும் போது உணவில் கிருமி தோற்று ஏற்படாது. அதே போல உணவின் சுவையும் அதிகரிக்கும்.

பச்சை கற்பூரம் சளி தொல்லை மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

பச்சை கற்பூரம் சிறந்த நறுமணம் கொண்டது. இதை வீட்டில் வைத்திருந்தால் காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியமானது.

கால் பாத வெடிப்பு உள்ளவர்கள் பச்சை கற்பூரத்தை தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும். பச்சை கற்பூரம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் இளமையையும் பாதுகாக்கிறது.