ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செலரியில் உள்ள சத்துக்களும் பல்வேறு பயன்களும்...!!

தினமும் சிறிது செலரி சாப்பிடுங்கள். இதில் உள்ள ப்தலைடுகள், இரத்த ஓட்டத்தை குறைந்தது 14% மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, உடலினுள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஒரு நாளைக்கு 2 தண்டு செலரியை சாப்பிட்டால், 7% கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.
 
புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். மேலும் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது.
 
செலரியில் அதிகளவிலான பாலிஃபீனால் என்னும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவையும் கண்களுக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கும் முன் சிறிது செலரியை சாப்பிடுவதால் உடனடியாக நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.
 
இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன.
 
செலரியில் சோடியம் நிறைந்துள்ளது. சோடியம் என்றதும் அன்றாடம் சேர்க்கும் உப்பில் இருக்கும் சோடியம் அல்ல. இதில் இருக்கும் சோடியம் முற்றிலும் ஆர்கானிக், இயற்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாகும். ஆகவே அன்றாட உணவில் சிறிது செலரியை சேர்ப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு  முற்றிலும் நல்லது.
 
உணவு நிபுணர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும் என்று தெரிவிக்கின்றனர். காலை மட்டும் இல்லாமல்  சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம்.