செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:32 IST)

அம்மான் பச்சரிசி மூலிகையின் மருத்துவ குணங்கள் !!

Amman Pacharisi
துவர்ப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இந்த கீரையின் முழுத்தாவரமும் மருந்தாக பயன்படக்கூடியது.


குளிர்ச்சித் தன்மை கொணட இந்த மூலிகையை எங்கு கிள்ளினாலும் பால் வடியும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இந்த சிறு செடி சொரசொரப்பான எதிர் அடுக்கு கொண்ட இலைகளைக்கொண்ட மூலிகையாகும்.

அம்மான் பச்சரிசியின் பூக்களை 40 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து ஐந்து நாட்களுக்கு கொடுத்து வந்தால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

அம்மான் பச்சரிசி இலைகளை பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சட்னி தயாரித்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். மலச்சிக்கலை தடுக்கும்.

அம்மான் பச்சரிசி இலை, பாசிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும். அம்மான் பச்சரிசி இலையுடன் மிளகு, 3 வேப்பிலை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

அம்மான் பச்சரிசி கீரையுடன் கிழாநெல்லி மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலையிலும் மாலையிலும் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் குணமாகும்.

அம்மான் பச்சரிசி இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். வாய் மற்றும் நாக்கு பகுதிகளில் உருவாகும் வெடிப்புகள் நீங்கும்.