1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருதம் பட்டை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?

மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, அதில் பத்தில் ஒரு பங்கு ஏலம், சுக்கு சேர்த்து, சூரனமாக்கி, காலை மாலை இரு வேலை, காய்ச்சி, காபி, டீ-க்கு பதில் அருந்தி வர, சர்க்கரை நோய் தீரும்.

மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி, காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க  வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும், பருகி வர, இரத்த அழுத்த நோய், உடலை விட்டு அகலும்.
 
மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலம், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து, பொடியாகி வைத்துகொண்டு, காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய், விரைவில் குணமடையும்.
 
வாய் புண், தொண்டை கமறல் போன்றவற்றால் அவதிப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை இரண்டு கப் நீரில் கலந்து 10 நிமிடம் நன்கு  கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல் நீங்கும். வாய்ப்புண் குணமாகும்.
 
நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா  தொந்தரவுகள் குறையும்.
 
அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு  அந்த எண்ணெய்யை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெய்யை மூட்டுவலி,  இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
 
இரத்த கசிவு, வீக்கம், வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருதம் பட்டை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பல் தேய்க்க வேண்டும். இதேபோல் ஒரு வாரம் செய்து வந்தால் பற்கள் சுத்தமாவதுடன், பல் ஈறு தொடர்பான பிரச்சினைகளும் மறையும்.
 
உணவு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதை சரி செய்ய ஒரு டம்ளர் மோரில் 5 கிராம் மருதம் பட்டை பொடியை  கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு தொந்தரவும், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.