சனி, 28 செப்டம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (10:27 IST)

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் கிவி பழம் !!

Kiwi
தினமும் ஒரு கிவிப் பழம் சாப்பிட்டால் போதும், உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கிவி இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்கிறது.


கிவி பழம் ஜீரண நேரத்தில் மிக குறைவான அளவே சர்க்கரையை உடலுக்குள் ஏற்றுகிறது, ஆகவே நீரிழிவு நோயாளிகள் கிவி பழத்தை பயமின்றி எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக அளவில் உள்ள லுடீன் எனும் பொருள் கண்பார்வைக்கு பெரிதும் உதவி செய்கிறது, விட்டமின் ஏ கண்பார்வை சிறக்க உதவி செய்கிறது.

கிவி பழத்தில் இருக்கும் ஒருவகையான பிளவனாய்டு மற்றும் கரோடனாய்ட் போன்றவை புற்று நோய் ஆபத்திலிருந்து நம் உடலைக் காக்கிறது. கிவியில் உள்ள விட்டமின் சி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது. சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் உடலினுள் வரவிடாமல் தடுக்கிறது.


கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கிவி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன, இது உடலில் உண்டாகும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.


Kiwi


கிவி அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழமாகும், இது கண் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்கிறது. மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும், முக பருக்களைக் குறைக்கவும் பெண்கள் தினமும் கிவி பழத்தை உட்கொள்ள வேண்டும். உடலில் அதிக கொழுப்பு உள்ள பெண்கள், தம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க கிவி பழத்தை உட்கொள்ள வேண்டும்.