1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கழற்சிக்காய் !!

நீண்ட நாட்பட்ட வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள், புரையோடிய கட்டிகள் ஆகியவை குணமாகவும் கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

புதிதாக தூளாக்கப்பட்ட கழற்சி சூரணம் ஆறாத கட்டிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்ற மேல்பற்றிடும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
கழற்சி இலைகள் மற்றும் விதைகள் வீக்கத்தைக் கரைக்க மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. காம்புகளும் இலைகளும் வயிற்றுப்பூச்சிகளை  அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாதவிலக்கை ஊக்குவிப்பதற்கும் பால் சுரப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 
கழற்சி விதைகள் கருப்பையைத் தூண்டக்கூடியதாகவும், மாதவிலக்கு சரியான வகையில் நடைபெறுவதற்கும் அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிப்பதற்கும் சூரணித்துப் பயன்படுத்தப்படுகிறது.
 
கழற்சி விதைச் சூரணம் வாத நோய்களைத் தணிப்பதற்கும், முத்தோஷ சமனியாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும் வீக்கங்களைக் கரைப்பதற்கும்,  விரைவாதம், இருமல், ஆஸ்துமா, வெண்குட்டம், குட்டம் மற்றும் தோல் நோய்கள், பசியின்மை, சீதபேதி, வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கசிவு ஆகியன குணமாகவும்,  வயிற்றுப்புழுக்கள் வெளியேறவும், ஈரல் பலப்படவும், மண்ணீரல் பலப்படவும், சர்க்கரை நோயைத் தணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 
கழற்சிப்பருப்பு ஒன்றோடு ஐந்து மிளகு சேர்த்து அந்திசந்தி என இருவேளை உள்ளுக்குக் கொடுப்பதால் வாதக்காய்ச்சல், விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சல், கர்ப்பப்பை வலி, கண்ட மாலை, அண்ட வாதம் ஆகியன குணமாகும்.
 
ஒரு கழற்சிக்காய்ப் பருப்புடன் சிறு அளவு பெருங்காயம் சேர்த்து மோருடன் குடிக்க வயிற்றுவலி, வயிற்றுப்புண் ஆகியன குணமாகும்.
 
கழற்சிக்காயைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சூரணித்து அத்துடன் படிகாரம், கொட்டைப்பாக்கு, கட்ட கரி ஆகியவற்றைச் சேர்த்து பல் துலக்கி வர ஈறு நோய்கள் போகும், ஈறுகள் பலப்படும், பல் சொத்தை குணமாகும்.