திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (10:07 IST)

கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றதா வெண்டைக்காய்....?

Lady Finger
வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.


கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். காரணம், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க ஆரோக்கியமான உணவை உண்பது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயில் பல ஊட்டச்சத்துகள் இருப்பதால் தயக்கமின்றி சாப்பிடலாம். வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

வெண்டைக்காயில் நிறைவான நார்ச்சத்து காரணமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால் கர்ப்பகாலத்தில் வரக்கூடிய நீரிழிவு நோய் அபாயத்தையும் தவிர்க்க முடியும்.

வெண்டைக்காயில் உள்ல ஃபோலேட்டின் நல்ல மூலமாகும். இந்த ஃபோலேட் டிஎன்ஏ மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. எனவே வெண்டைக்காய் உட்கொள்வதால் குறைபாடுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

வெண்டைக்காய் வைட்டமின்களின் சுரங்கம். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி இரும்பை உறிஞ்சி குழந்தை வளர உதவுகிறது.