புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சளித்தேக்கத்தை வெளியேற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரை..!

வல்லாரையின் இலைச்சாறு தினமும் 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம் குணமாகும். ஆமணக்கெண்ணையில் வல்லாரை இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும்  ஆறும்.
வல்லாரை, உத்தாமணி, மிளகு சமமாக எடுத்து அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செய்து காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில்  கொடுக்க அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.
 
கீழாநெல்லி, வல்லாரை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும். வல்லாரை  இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவந்தால் யானைக்கால் வீக்கம், குறையும்.
வல்லாரை இலைகளுடன் 2 மிளகு, ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை  இரு வேளைகளும் வெறும் வயிற்றில் உண்டு வர நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்குகள் முதலியவை குணமாகும்.
 
வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்துகொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக்கம்மல் நீங்கும். வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து  அரைத்து 5 கிராம் அளவு காலை வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர நீர் எரிச்சல் தீரும்.
 
வல்லாரை இலையுடன் சம எடையளவு வேலிப்பருத்தி இலையைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 4 நாள்கள் உட்கொண்டு வர தடைப்பட்ட மாதவிடாய் வெளியாவதோடு, மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.