புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றுமா இளநீர்?

மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என  பல்வேறு வகைகள் உள்ளன.


இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும்  உதவுகிறது. 
 
இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இளநீர் குடல்புழுக்களை அழிக்கிறது. இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச்சத்து பானமாகும்.
 
இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது.
 
உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய் வதற்கு இளநீரை பருகுவது நல்லது. இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.
 
இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. புகையிலை மற்றும் மது போன்றவை களினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல் படுகிறது.
 
மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத்  தணிக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதைச் சரிசெய்யவும் இது உதவுகிறது.
 
சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது. இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. 
 
இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.