செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:01 IST)

வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துமா...?

கரும்பிலிருந்து கிடைக்கும் சாற்றை சில வேதிப் பொருட்களை பயன்படுத்தி வெள்ளையாக்கினர். அதுவே காலப்போக்கில் சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையானது.


கருப்பு நிறமுள்ள கரும்புசாறில் கால்சியம் கார்பனேட்டை கலப்பதாலேயே வெண்மையாகிறது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும்.

வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வெள்ளை சர்க்கரையை சாப்பிடக்கூடாது.

வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் நம் உடலில் கல்லீரல் பிரச்சனை ஏற்படும். இதனால் கல்லீரலில் பிரச்சனை ஏற்படாமலிருக்க வெள்ளை சர்க்கரையை சாப்பிடக்கூடாது. மேலும் கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரையை சாப்பிட வேண்டாம்.

வெள்ளை சர்க்கரையை சாப்பிட்டு வருவதால் உடலில் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் உடலில் தோல் நோய்கள் ஏற்படும்.

வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் உடலில் ஞாபகமறதி ஏற்படும். இதனால் ஞாபகமறதி ஏற்படாமலிருக்க வெள்ளை சர்க்கரையை நாம் சாப்பிடக்கூடாது.

தினமும் வெள்ளை சர்க்கரையை சாப்பிட்டு வந்தால் பற்களில் பிரச்சனை ஏற்படும். இதனால் பற்களில் அதிக அளவு பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரையை சாப்பிட வேண்டாம்.