வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (17:45 IST)

உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க பேரிச்சம் பழம் உதவுகிறதா....?

dates
பேரிச்சம் பழம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .மேலும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை கூட்டுகிறது.


பேரிச்சம்பழத்தில் உள்ள மக்னீசியம், பக்கவாதம், இதயம் சார்ந்த பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. இவை உடலுக்கு ஊட்டமளிக்கிறது. அந்த  மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி ,சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது ,மேலும் குடல் புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது

பேரிச்சம் பழத்தில் உள்ள ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் , உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.

உயர்இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் உயராமல் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

சிலருக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் இருந்து அவஸ்தை படுவர். அவர்கள், தினமும்  மூன்று பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும். இதில், உள்ள நார்ச்சத்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்த்து வைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். மேலும் பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்.