புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:59 IST)

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குமா ப்ரோக்கோலி...?

ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.


ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது.

ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை பராமரிக்க உதவுகின்றன.

ஞாபக சக்தி அதிகரிக்க இவை உதவுகின்றன. ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.