1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (15:04 IST)

உடல் எடை குறைப்பதற்கு மிகவும் ஏற்ற பழச்சாறுகள் எவை தெரியுமா...?

உடல் எடையை விரைவாக குறைக்க பழச்சாறு தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவிற்கு பதிலாக ஜுஸ் பருகவேண்டும்.  பழச்சாறு குடிக்கும்போது வயிறு நிறைத்து நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும்.


அன்னாசி பழத்தை எடுத்துக்கொண்டு சிறிதளவு தணண்ணீர் சேர்த்து அறைத்து ஜுஸ் செய்து பருகினால் உடல் கொழுப்பை கரைத்து ஒரு மாதத்திற்குள் எடை குறைக்க உதவும்.

வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் நமது உடல் எடை குறையும். ஆரஞ்சு ஜுஸ் குடித்து வந்தால் அல்சர் சரியாகும். மேலும் அஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் உடல் சூட்டைக் குறைக்கும் உதவுகிறது. தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும் உடல் எடை குறையும்.

தக்காளியை 3 அல்லது 4 எடுத்து நன்கு வேகவைத்து சிறிதளவு வெல்லம் சேர்த்து அறைத்து ஜுஸ் போன்று குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நன்கு அறியலாம்.

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதை பிழிந்து சாறெடுத்துக்கொண்டு சிறிதளவு உப்பு சிறிதளவு தேன் சேர்த்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்தால் உடல் எடை குவைவதற்கு உதவும்.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் விரைவில் கொழுப்பு கரைய எந்த பழச்சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் பருகினால் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

ஒரு டம்ளர் திராட்சை ஜுஸ்ஸ்யை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை திராட்சை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.