செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வைட்டமின் D குறைபாட்டினால் என்ன பிரச்சினைகள் உண்டாகும் தெரியுமா...?

வைட்டமின் D என்பது சூரிய ஒளி ஊட்டச்சத்து என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் D என்பது உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்களில் ஒன்றாக  கருதப்படுகிறது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது மனித உடல் அதை தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். 
 


உலர் உணவுகள், சால்மன் மீன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு போன்றவை வைட்டமின் D-க்கான உணவு ஆதாரங்களாக இருக்கின்றன. உடலில் கால்சியம் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வைட்டமின் D மிக முக்கியமானது. மேலும், பாஸ்பரஸின் அளவை பராமரிக்க உதவியாக இருக்கிறது.
 
வைட்டமின் D குறைபாட்டிற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் சில உயரமான இடத்தில் வசிப்பது, மாசுபட்ட பகுதியில் இருப்பது, கருமையான சருமம், பருமனாக இருப்பது, குடல் ஆரோக்கியம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். வைட்டமின் D ஆரோக்கிய  நன்மைகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அழகையும் மேம்படுத்தும். 
 
தோலழற்சி: வைட்டமின் D போதுமான உட்கொள்ளாவிட்டால் தோல் சிவத்தல் மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். முகப்பரு: வைட்டமின் D ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது முகப்பருவைத் தடுக்க உதவுகிறது.
 
முதுமை தடுப்பு: குறைந்த அளவு வைட்டமின் D உட்கொள்ளல் வயதாகும் செயல்முறையை வேகப்படுத்தும். சரியான அளவு வைட்டமின் D உட்கொன்றால்  இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.
 
முடி வளர்ச்சி: வைட்டமின் D மயிர்க்கால்களை தூண்டும் தன்மைகொண்டது. இது முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
 
பொடுகு: வைட்டமின் D குறைபாடு பொடுகு சம்பந்தபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே பொடுகு பிரச்சினை இல்லாமல் இருக்க போதுமான அளவு வைட்டமின் D எடுத்துக்கொள்ள வேண்டும்.