வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

திருநீற்று பச்சிலை மூலிகை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?

சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.
 
முகம் போன்ற பகுதிகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள். இந்த வசப் பருக்களை தெரிந்தோ, தெரியாமலோ நகத்தால்  கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தி விடும்.
 
இத்தகைய விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத்தேவையில்லை. திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பை  வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும்.
 
தேள் கடிக்கு திருநீற்று பச்சிலையை கசக்கி அதன் சாற்றை தேள் கடித்த இடத்தில் ஊற்றி, இலையோடு சேர்த்து வைத்து கட்டும்போது தேள் விஷம் இறங்குவதோடு, கடியால் உண்டான வலியையும் போக்கும்.
 
கண்கட்டி இருப்பவர்கள் திருநீற்று பச்சிலை சாற்றை கட்டியின் மேல் தொடர்ந்து பூசி வர கட்டி விரைவில் அமுங்கி விடும். காலாணி பிரச்சனைக்கும் திருநீற்று பச்சிலையை கசக்கி கட்டு கட்டி வந்தால் ஒரே வாரத்தில் காலாணி படிப்படியாக சரியாகி விடும். 
 
வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த இலையை அப்படியே பச்சையாக மென்று சாப்பிட்டு வர இரண்டு மூன்று நாட்களில் புண் ஆறிவிடும்.