சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலையில் இத்தனை உடல் ஆரோக்கிய நன்மைகளா...!!
கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.
இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லி இலையை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும். கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் E இதில் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்க்கு உதவும் என்சைம்கள் சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது.