செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (16:15 IST)

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை நீக்கும் தேங்காய் எண்ணெய் !!

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய்யை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளித்தால் உடலில் உள்ள உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.


தேங்காய் எண்ணெய்யில் தோலை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளன. தலைமுடி கொட்டுதல், பித்த நரை, இளநரை, பொடுகு, வழுக்கை போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய்யை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

தினமும் காலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றி ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணெய்யை துப்பி விட வேண்டும். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்சொத்தை, ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே இருக்கும் நோய்களை இருந்த இடம் தெரியாமல் வெளியேற்றும்.

வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

சிறுநீரகங்களில் அதிகம் உப்பு சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.