செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மூலநோய் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் எளிய மருத்துவ குறிப்புகளும்...!

பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும், ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது.
உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும். அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல்  இளக்கமின்றி இந்நோய் தோன்றும்.
 
அதிக உடலுறவு, அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளிவரும் போது முக்குவதாலும் மூலநோய் தோன்றும். மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறுகின்றனர். வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும்  இவைகள் தான்.
உள் மூலம் - ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது. வெளி மூலம் - ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது. இரத்த மூலம் - மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.
 
தடுக்கும் வழிகள்:
 
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள், தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நீர் அருந்தவேண்டும், தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும். மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது. தினமும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி  மேற்கொள்ளுதல் நல்லது.
 
உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்தல் வேண்டும். கருணைக் கிழங்கு மற்றும் பிடி கருணை அடிக்கடி உணவில்  சேர்த்தல் நன்று.
 
பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு  வர மூலம் கரைந்து விடும்.
 
மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து, அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய்  குணமாகும்.
 
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும்போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.