1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் கிடைக்கும் நன்மைகள் !!

உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் கிடைக்கும் நன்மைகள் !!
கருஞ்சீரகம் வயிற்றுக் கோளாறை போக்கும், பித்தமும் போகும், சுருக்கத்தைப் போக்கி உடல் தேற்றும் , சூதக வாதம் கப நோய்களைக் கண்டிக்கும்.  உடலில் தேங்கியுள்ள நீரை போக்கும். 

கருஞ்சீரகத்தை நம் உணவில் சேர்த்து வந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை வராது இதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் இந்த வேதிப்பொருள் கருஞ்சீரகதில் மட்டுமே நிறைந்திருக்கிறது.
 
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் கால்சியம், இரும்புசத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்களையும் இது கொண்டுள்ளது.
 
உடலுக்கு சுறு சுறுப்பை தரக்கூடியவை கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான கல்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை இந்த கருஞ்சீரகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.
 
பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை கருஞ்சீரகம் சீராக்க வல்லது.
 
மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் விரைவில் குணமடையலாம். வயிற்றில் உண்டாகும் சமிபாட்டு கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது.
 
சுத்தப்படுத்திய கருஞ்சீரகம் 100 கிராம் பெருங்காயம் பெரிது 200 கிராம் பூண்டு தோலுரித்து 50 கிராம் பனை வெல்லம் 100 கிராம் மேற்கூறிய அனைத்தையும் தூளாக்கிய  பனை வெல்லத்தையும் கல்வத்தில் இட்டு நன்றாக மெழுகு போல் அரைத்து தூளாக்கி அளவு மாத்திரைகள் செய்து வைத்துக் கொண்டால் உடல் பருமன் சூதகச் சிக்கல் சிறுநீர் பிரியாமை போன்ற நோயுள்ள பெண்களுக்கு இதை கொடுத்தால் சிறுநீர் பிரியும். உடற்பருமன் மாறும். உடல் நலம் காணும். இது ஒரு அரிய மருந்தாகும். இதனை நன்கு தயாரித்து வைத்துக் கொண்ட பெண்கள் ஒரு மாதம் பயன்படுத்தினால் மிகுந்த பயன் அடையலாம்.