புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதில் கிடைக்கும் கொத்தமல்லி தழையில் இவ்வளவு சத்துக்களா...?

கொத்தமல்லியில் பல பயன்கள் காணப்படுவதால், கருவுற்ற சமயத்தில் உண்ணக்கூடிய மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கொத்தமல்லி தழையில் விட்டமின் ஏ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் சி சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளதால் உடலில்  ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது. இது ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி மற்றும் விக்கலை  தடுக்கிறது.
 
கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
 
கொத்துமல்லி, இரு பெரும் நோய் எதிர்ப்பு சக்தி சத்துக்களை உள்ளடக்கியது அதாவது வைட்டமின் A மற்றும் வைட்டமின் C ஆகும். அதன் மருத்துவ குணங்கள்,  ஒவ்வாமை, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சல், ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு நிவர்த்தி அளிக்கவல்லது.
 
கொத்துமல்லியில் வைட்டமின் K மற்றும் இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், இரத்த சோகையைத் தடுப்பதோடு, இரத்தம் உறைதலை மேம்படுத்துகிறது. உணவு நன்முறையில் ஜீரணிக்க உதவுவதோடு, பசியைக் குறைப்பதன் மூலம்  எடை குறைப்பிலும் உதவுகிறது.
 
கொத்தமல்லியில் காணப்படும் சக்திவாய்ந்த அமிலங்கள், இரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் அளவினைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.
 
எலும்புகள், பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்து இதில் உள்ளது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க் கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.