புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பரங்கிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் !!

பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குக் குளிர்ச்சி தரும் சிறந்த பானமாக அமைகிறது. பரங்கிச்சாறு ஜீரணத்தைத் தூண்டி, மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. 

பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும்.
 
சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும். பரங்கிக்காயின் பழுத்த காம்பை எடுத்து நன்கு  உலர்த்தி நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க நச்சுக்கள் நீங்கும்.
 
கல்லீரலைப் பற்றிய நுண்கிருமிகளை போக்கி, கல்லீரலின் செயல்பாடுகள் மேன்மை அடைகின்றன. பரங்கிக்காய்ச் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம்  சேர்க்கிறது.
 
பரங்கிச் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது.  இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. 
 
பரங்கிச்சாறு அமிலச் சத்தினைக் குறைக்கக்கூடியது. புண்களை ஆற்றக் கூடியது. பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு  வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.