வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 17 மே 2014 (15:09 IST)

நாடுமுழுவதும் பாஜக 282, தமிழகத்தில அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி

நடந்து முடிந்த நாடாளுமள்ற தேர்தலில் நாடுமுழுவதும் பாஜக 282 தொகுதிகளிலும், தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக கூட்டனி 336 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடுமுழுவதும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவும், தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசும் வெற்றி பெற்றன.
 
இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக அதிமுக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.