நடுரோட்டில் இளைஞர் அடித்துக் கொலை... வேடிக்கை பார்த்த மக்கள் !
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸியாபாத்தில் எதோ ஒரு பிரச்சனையால் அஜய் என்ற இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸியாபாத்தில் வசித்து வருபவர் கோவிந்த். இவருக்கும் அஜய் (23) என்ற இளைஞருக்கும் எதோ பிரச்சனை இருந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கோவிந்திற்குத் தெரிந்தவர்கள் அஜய்யை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கி அடித்தே கொன்றனர்.
அருகில் மக்கள் இருந்தும் இதற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை அதைத் தடுக்கவுமில்லை; இந்நிலையில் இச்சம்பவ இடத்த்திற்கு வந்த போலீஸார் மக்கள் ஆம்புலன்ஸுக்கு அழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி வன்முறையும், கொலையும் நடந்துவரும் உத்தரபிரதேசத்தில் மறுபடி ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.