செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (00:04 IST)

நீங்களுமா மோடி? வேதனையுடன் கமல் கூறியது என்ன தெரியுமா?

அதிமுக அரசின் ஊழல் குறித்து கமல் குற்றச்சாட்டு வைக்கும்போது நியாயமாக பார்த்தால் பாஜக தலைவர்கள் கமலை ஆதரிக்க வேண்டும். ஆனால் கமலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக பாஜக தலைவர்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். உண்மையில் இப்போதுதான் பொதுமக்களுக்கு இது அதிமுக அரசா? அல்லது பாஜகவின் பினாமி அரசா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் கமல்ஹாசனை சந்தித்தனர். அப்போது கமல் அவர்களிடம் மனம் விட்டு பேசியதாக கூறினர். குறிப்பாக தான் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் கூட தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறியதாக கூறினர்.
 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கமல் எங்களுடன் மனம்விட்டுப் பேசினார். மத்திய பி.ஜே.பி ஆட்சியின் மீதான தனது விமர்சனங்களை அவர் முன் வைத்தார். 'இஸ்ரேலுக்குப் பயணம் செய்த நம்ம பிரதமர் மோடி, பாலஸ்தீன மக்கள் மீதும், குறிப்பாக குழந்தைகள் மீதும் கடுமையான தாக்குதல் நிகழ்த்தும் இஸ்ரேல் அரசின் வன்முறை குறித்துப் பேசாதது வருத்தத்துக்குரியது. பாலஸ்தீனத்தை இந்தியாவும்கைவிட்டு விட்டதே' என்று தெரிவித்து கமல் அப்போது வேதனைப்பட்டார்.