ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (15:55 IST)

20 ஆம் தேதிக்கு பின் அனுமதிக்கப்படும் தொழில்கள் எவை ? மத்திய அரசு வெளியீடு

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும்  ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின்னர் அனுமதிக்கப்படும் தொழில்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், தேசிய அளவில் தளர்வு அளிக்கப்படும் துறைகள் எவைஎவை என்பது குறித்த விவரம் வெளியிட்டுள்ளது.

அதில், குறைந்த ஊழியர்களுடன் நகர்ப்புற கட்டுமானத் தொழில்களுக்கு அனுமதி வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், போன்றவை இயங்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேக்கேஜில் மூங்கில் விற்பனை தேங்காய் விவசாயம், வனப்பொருட்கள் போன்ற தொழில்களுக்கு கூடுதலாக விலக்கு   அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சரக்குகளைக் கொண்டுசெல்ல எந்த தடை உத்தரவும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் , இதர சரக்கு வாகனங்கள், விவசாயப் பணிகள், மீன் பிடித்தொழில்கள், உணவுப் பதப்படுத்துதல் நிலக்கரி, தாமிரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி, நிலக்கரி தாமிரம் மற்றும் எண்ணெய் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.