மலேசியாவில் என்னை கைதி போல் நடத்தினார்கள்: வைகோ குற்றச்சாட்டு
ஆபத்தானவர்களின் பட்டியலில் வைகோ பெயர் இருப்பதாக கூறி நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள மலேசியா சென்ற வைகோ கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்
மேலும் வைகோவில் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யபட்டு பின்னர் விசாரணைக்கு பின்னர் இரவு வைகோவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர்
இன்று அதிகாலை சென்னை திரும்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்க கூடாது என்ற சதியின் விளைவே இது. என்னால் மலேசியாவுக்கு ஆபத்து என்று கூறிய மலேசிய போலீசார் என்னை சிறைக்கைதி போல் நடத்தினார்கள்,
எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்