புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:40 IST)

அங்கிள் என்று அழைத்த பெண்ணை தாக்கிய நபர்! – உத்தரகாண்டில் அதிர்ச்சி!

உத்தரகாண்டில் தன்னை அங்கிள் என அழைத்த இளம்பெண்ணை இளைஞர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சித்தர்கஞ்ச் டவுன் பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் மோகித் குமார். இவரது கடையில் நிஷா அகமது என்ற 18 வயது பெண் பேட்மிண்டன் ராக்கெட் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.

அதை வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதன் ஸ்ட்ரிங்குகள் சில அறுந்திருப்பதை கண்டு அதை மாற்ற மீண்டும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மோகித் சிங்கை அந்த பெண் அங்கிள் என அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த 35 வயதான மோகித் சிங் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மோகித் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.