வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (11:57 IST)

நடிகரை எதிர்த்து போட்டியிட்டது எனது தவறு.. முன்னாள் முதல்வரின் மகன் அதிருப்தி..!

muralidharan
திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் திருச்சூரில் போட்டியிட்டது நான் செய்த தவறு என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளிதரன் திருச்சூரில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார் என்பதும் அவர் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபியுடன் தோல்வி அடைந்தது மட்டுமின்றி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து அவர் கூறிய போது ’காங்கிரஸ் கட்சியில் அதிகமாக கோஷ்டி தலைவர்கள் உள்ளனர் என்றும் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது கட்சியின் நிர்வாகிகள் மாறி மாறி அடித்துக் கொண்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 
 
திருச்சூருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தால் நல்லது நடக்கும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது என்றும் ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்குகள் எனக்கு கிடைத்தது என்றும் சிலர் மட்டும் நினைத்தால் வாக்குகள் மாறிவிடாது யாருக்கும் எதிராக நான் புகார் கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். 
 
மேலும் திருச்சூரில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டு இருக்கலாம் என்றும் திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபியை எதிர்த்து போட்டியிட்டது தவறுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran