செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (20:30 IST)

பைக்கை ஏரியில் தூக்கி வீசிய நபர் ! பெட்ரோல் விலை உயர்வால் அதிருப்தி

நேற்றைப் போல் இன்று இரண்டாவது நாளாக 1 லிட்டர் மற்றும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கிவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு இருசக்கரவாகனத்தை வைப்பதற்குப் பதில் சைக்கிளே பரவாயில்லை என ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை ஏரியில் வீசியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 5 மாநில தேர்தலின் போது விலையேற்றம் காணாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்றும் அதேபோல் பெட்ரோல் பெட்ரொல் டீசல் விலை உயர்வு  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் 1 லிட்டர்  ரூ.96.71 க்கு சென்னையில் விற்பனை ஆகிவருகிறது. அதேபோல் ரூ.90.92 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

1 லிட்டர் மற்றும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கிவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸை சார்ந்த ஒருவர் தனது இரு சக்கரவாகனத்தை ஏரியில் வீசும்  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.