திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (14:04 IST)

சிறையில் ராகுல்காந்தி புத்தகம் எழுத வேண்டும்: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

subramaniya swamy
சிறையில் ராகுல் காந்தி புத்தகம் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி குறித்து அவதூறாக  பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்
 
இந்த நிலையில் ராகுல் காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran