1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (09:52 IST)

பங்குச்சந்தை இன்றும் 250 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Share
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்றும் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது மகிழ்ச்சியை கூடுதலாக அதிகரித்துள்ளது
 
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் 260 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 59 ஆயிரத்து 955 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 90 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 886 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச்சந்தை இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 60 ஆயிரத்தை நெருங்கி வருவது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது