1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (18:25 IST)

பங்குச்சந்தை திடீர் ஏற்றம்: சென்செக்ஸ் 629 புள்ளிகள் ஏறியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையும் அவ்வப்போது படு பாதாளத்திற்கு சென்று அதன் பின் மீண்டு வருகிறது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை பெரும் இறக்கத்தை கண்டுள்ள நிலையில் இன்று பங்குசந்தை நல்ல ஏற்றத்தை கண்டுள்ளது
 
இன்றைய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 697 என்ற நிலையில் நிறைவு பெற்றது. இன்று முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் இந்த ஏற்றம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 167 புள்ளிகள் அறிவித்து 11,417 என்ற நிலையில் உள்ளது. வங்கி, நிதிச் சேவை, தொலைத்தொடர்பு, உலோகம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது