வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (08:48 IST)

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை: இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் 370ஆவது சிறப்புப் பிரிவு நீக்கப்பட்டது, அம்மாநிலத்தை இரண்டாக மத்திய அரசு பிரிக்க எடுத்த முடிவுகள் ஆகியவை காரணமாக அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அம்மாநிலம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து 144 தடை உத்தரவை தளர்த்தும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார் 
 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், முதல் கட்டமாக 190 பள்ளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் தற்போது ஜம்மு காஷ்மீரில் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த இரண்டு சேவைகளும் முழுமையாக வழங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
 
மேலும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பிய பின்னர் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பணிகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கன்சால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பக்ரீத் மட்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும், அம்மாநில மக்கள் கிட்டத்தட்ட முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன