வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (10:07 IST)

வீட்டுக்கு திருட்டு கரண்ட் எடுத்த சமாஜ்வாடி எம்.பி..! அபராதம் விதித்த மின்வாரியம்!

உத்தர பிரதேசத்தில் தனது வீட்டிற்கு பெறப்பட்ட மின்சாரத்திலேயே முறைகேடு செய்த சமாஜ்வாடி எம்.பிக்கு அம்மாநில மின்வாரியம் அபராதம் விதித்துள்ளது.

 

 

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜியாஉர் ரஹ்மான். இவரது வீட்டில் 50க்கும் மேற்பட்ட எல்.இ.டி பல்புகள், 3 ஏசிகள், 2 குளிர்சாதன பெட்டி, டிவிக்கள் என ஏராளமான மின்னணு சாதனங்கள் இருந்துள்ளது. ஆனாலும் இவருக்கான மின் கட்டணம் மிகவும் குறைவாகவே வந்துள்ளது.

 

இதனால் சந்தேகம் அடைந்த மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டை சோதிக்க சென்றபோது, வீட்டில் சோலார் மின் தகடுகள், ஜெனரேட்டர் உள்ளதாகவும் அதனால் மின் கட்டணம் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர். ஆனால் சோலார் மின் தகடுகள் செயல்படும் நிலையில் இல்லை என்பதை மின்வாரிய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர் வீட்டு மின் மீட்டரை சோதித்தபோது, 5.5 கிலோவாட் மின் சுமையைக் காட்டியுள்ளது. ஆனால் அவர் 16.5 கிலோவாட் மின் சுமையை பயன்படுத்தி வந்துள்ளார்.

 

இதனால் மின் திருட்டு தடுப்பு சட்டப்பிரிவின்படி, ஜியாஉர் ரஹ்மான் மின்சாரம் திருயதற்காக ரூ.1.91 கோடியை அபராதமாக அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.

 

Edit by Prasanth.K