வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (11:52 IST)

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட்.... விரைவில் இந்தியாவில்!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது. இதற்கான சோதனை நடந்து வந்தது. 
 
இந்நிலையில் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 சதவீதம் செயல் திறன் கொண்டது. ஸ்புட்னிக் லைட் என்பது ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V -யின் பாகம்-1 ஆகும்.