1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (13:36 IST)

மார்ச் 8 முதல் பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

Rs.1000
மார்ச் 8 முதல் மகளிர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என்றாலும் வரும் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு அடுத்த மாதம் முதல் மாதம் தோறும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அம் மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் செளஹான் அறிவித்துள்ளார்.
 
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி முதல் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran