1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (10:51 IST)

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை : பஜாஜ் பின்சர்வ் உட்பட 56 நிறுவனங்களின் உரிமம் ரத்து

பஜாஜ் பின்சர்வ் உட்பட 56 நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய வங்கி அமைப்பில் ரிசர்வ் வங்கியின் உரிமத்துடன் NBFC எனப்படும் பல வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.  அந்த நிறுவனங்கள் மீது வரும் மோசடி மற்றும் செயல்படாத நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அவ்வப்போது கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
 
அவ்வாறு, ஒழுங்குமுறை விதிகளை மீறிய சுமார் 56  நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதில் சில நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை ஏற்றுத் தாமாகவே முன்வந்து உரிமத்தை ரத்து செய்துள்ளன.
 
அப்படி உரிமம் ரத்தான நிறுவனங்கள், தங்களின் சொத்துகளை வேறு எந்த ஒரு நிறுவனத்திற்கும் மாற்ற முடியாது. நாட்டின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையான பஜாஜ் பின்சர்வ் ரிசர்வ் வங்கி கட்டளையின் படி தங்களது NBFC உரிமத்தைத் திருப்பி அளித்துள்ளது.
 
இனிமேலு, பஜாஜ் பின்சர்வ் வெறும் டெப்பாசிட் பெறும் நிறுவனமாக மட்டுமே செயல்படும். எனவே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் பொதுமக்கள் நன்றாக யோசித்து முதலீடு செய்யவேண்டும்.
 
ரிசர்வ் வங்கி ரத்து செய்த நிறுவனங்களில், 16 நிதி நிறுவனங்கள்  கொல்கத்தாவில் இருந்தும், 10 நிறுவனங்கள் மும்பையில் இருந்து துவங்கப்பட்டவை. இதில் வாபி இன்வெஸ்ட்மென்ஸ், க்ரோடன் டிரேடிங் பிரைவேட், சீயர்ஸ் செக்கூரிட்டி அண்ட் இன்வெஸ்ட்மென்ஸ், பியூச்சர் வென்சர்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரபலமானவை.