செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:22 IST)

ரஞ்சன் கோகாய் மீது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரஞ்சன் கோகாய் அவர் பணி நிறைவடைந்ததும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் 46-வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ரஞ்சன் கோகாய் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்று 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன் இவர் அளித்த பரபரப்பான தீர்ப்புகளில் அயோதி ராமர் கோயில் வழக்கு வழக்கும் ஒன்று என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஞ்சன் கோகாயை நியமன எம்பியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமிக்கப்பட்டது பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியது.

ஆனால் எம்பியாக நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் இதுவரை 6 முறை மட்டுமே நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்றுள்ளார். இது பற்றி அவர் ஒரு தொலைக்காட்சி சேனலில் நேர்காணல் அளித்த போது ‘நான் குடியரசுத்தலைவரால் நேரடியாக நியமிக்கப்பட்டவன். எந்த கட்சியின் ஆதரவுடனும் நான் எம்பி ஆகவில்லை. கட்சி உறுப்பினர்கள் மணி அடித்தால் நாடாளுமன்றத்துக்கு வந்துவிடுவார்கள். நான் அப்படி செல்வது அவசியமில்லை. நான் எப்போது கருதுகிறேனோ அப்போது செல்வேன்’ எனப் பேசியிருந்தார்.

அவரின் இந்த பேட்டி சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் நேற்று அவர் நாடாளுமன்ற அவைக்கு வந்த போது அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.