அயோத்தி வந்த ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாலை மரியாதை செய்த பக்தர்கள்!
பாரத் கவுரவ் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று அயோத்தியை வந்தடைந்ததை அடுத்து அயோத்தியில் உள்ள ராமர் பக்தர்கள் அந்த ரயிலுக்கு மாலை மரியாதை செலுத்தி வரவேற்றனர்
மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு வந்த பக்தர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர்சிங் தெரிவித்தார். அயோத்தியில் இறங்கிய பக்தர்களுக்கு மேயர் மலர் தூவி பக்தர்களை வரவேற்றார்
ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் நல்ல வசதிகளை கொண்டுள்ளது என்றும் இந்த ரயிலில் பயணம் செய்தது சந்தோசமான அனுபவமாக இருந்தது என்றும் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் ரயில்வே துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்
இந்தியா முழுவதும் இந்த சிறப்பு ரயில் 17 நாட்கள் மற்றும் 18 இரவுகள் பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது