புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (20:36 IST)

பன்றி காய்ச்சலுக்கு பாஜக எம்.எல்.ஏ. பலி!

ராஜாஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதி எம்.எல்.ஏ பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 

நாடு முழுவதும் வைரஸ், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ராஜாஸ்தான் மாநிலத்தில் பெண் எம்.எல்.ஏ ஒருவர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கீர்த்தி குமாரி. இவரது பாஜக கட்சியை சேர்ந்தவர். இவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவ சோதனைக்கு பின் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது.
 
இதையடுத்து 12 மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.