1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:55 IST)

5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு விடுதலையா? ராகுல் கந்தி ஆவேசம்

Rahul Gandhi
5 மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்து 3 மாத குழந்தையை கொலை செய்தவர்களுக்கு விடுதலையா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவுசெய்துள்ளார். 
 
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்பவர் 11 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றனர். 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது
 
இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டனர். பெண் சக்தி பற்றி பொய் பேசுபவர்களால் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது?. பிரதமரே, உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்க்கிறது.