முதன்முதலில் ரயிலுக்கு ஓனராக மாறிய பஞ்சாப் விவசாயி
உலகில் இதுவரை கார், பஸ், விமானம், கப்பல் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் தனியார்கள் வசம் உள்ளது. ஆனால் தனியாரிடம் இல்லாத ஒரே துறை ரயில் மட்டுமே. இந்நிலையில் நீதிமன்ற ஆணை காரணமாக பஞ்சாப் விவசாயி ஒருவர் ரயில் ஒன்றுக்கு உரிமையாளர் ஆகியுள்ளார்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சம்பூரன் சிங் என்ற விவசாயி. ரயில் தண்டவாளம் அமைக்க நிலம் கொடுத்தார். ஆனால் அந்த நிலத்திற்கு உரிய இழப்பீட்டை ரயில்வே நிர்வாகம் தரவில்லை. எனவே இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சிங்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் விவசாயி சிங்கிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகம் அந்த தொகையை வழங்க மறுத்ததால் சம்பூரன் சிங் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் ‘ஸ்வர்ண சதாப்தி’ ரயிலையும் லூதியானா ரயில் நிலைய அதிகாரி அறையையும், விவசாயிக்கு வழங்கும்படி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவை கையில் எடுத்து கொண்டு சம்பூரன் சிங் வழக்கறிஞரோடு ரயில் நிலையம் சென்று, ரயில் மீதான தனது உரிமையை தெரிவித்தார். ரயிலுக்கு உரிமையாளர் ஆகியுள்ள அவர் விரைவில் அந்த ரயிலை ஏலம் விடப்போவதாக கூறப்படுகிறது.