கொரோனா வரி ரத்து: மதுபானங்கள் விலை குறையுமா?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. அப்போது மதுபான விற்பனைக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியதை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனா வரி காரணமாக மதுபானங்களின் விலையில் ஏற்றம் ஏற்பட்டது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து புதுவையின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி ரத்து செய்யப்படுவதாக புதுவை முதல்வர் அறிவித்துள்ளார்
இதுகுறித்த மசோதா கவர்னரிடம் கவர்னரின் கையெழுத்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருடைய கையெழுத்து கிடைத்ததும் புதுவையில் மதுபான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்படும் என்றும் தெரிகிறது
இதனால் புதுவையில் இன்னும் ஒரு சில நாட்களில் மதுபானங்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,