செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (17:59 IST)

7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பறக்க இருக்கும் 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட்: தயார் நிலையில் இஸ்ரோ..!

ஏழு செயற்கைக்கோளுடன் விண்ணில் பறக்க தயார் நிலையில் பிஎஸ்எல்வி சி56 என்ற ராக்கெட் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
இந்த ராக்கெட் ஜூலை 30ஆம் தேதி விண்ணில் பாதுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகள் வரும் 30ஆம் தேதி காலை ஆறு முப்பது மணிக்கு செலுத்தப்பட இருப்பதாகவும் அதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
சிங்கப்பூரை சேர்ந்த 360 கிலோ கொண்ட செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் இந்த ராக்கெட்டில் உள்ளது.
 
இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களை வழங்கும் என்றும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran