வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (12:18 IST)

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

மத்திய அரசின் பிரச்சார் பாரதி நேற்று புதிய ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதில் 40 சேனல்கள் வரை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் பிரச்சார் பாரதி ’வேவ்ஸ்’ என்ற புதிய ஓடிடி தளத்தை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஓடிடி மூலம் தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ் வாணி ஆகிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
 
மேலும் இந்தியா டுடே, நியூஸ் நேசன், ரிபப்ளிகு, ஏ பி பி நியூஸ், என்டிடிவி இந்தியா உள்பட 40 சேனல்களை இந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து பிரச்சார் பாரதியின் தலைவர் கூறியபோது, குடும்ப பொழுதுபோக்கு மட்டுமின்றி, செய்திகள், ஷாப்பிங் வசதி, விளையாட்டுகள், திரைப்படங்கள் ஆகியவை இந்த ஓடிடியில் வழங்கப்படும் என்று கூறினார்.

பிரச்சார் பாரதியின் பழைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஓடிடி தளத்தில்  கிடைக்கும் என்றும், பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து, தங்களுடைய குழந்தை பருவத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Mahendran